A1 குற்றவாளியாகும் சந்தானம் - அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு! | santhanam next movie announced

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (02/03/2019)

கடைசி தொடர்பு:19:45 (02/03/2019)

A1 குற்றவாளியாகும் சந்தானம் - அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு!

இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியான படம் `தில்லுக்கு துட்டு 2'. இந்தப் படத்துக்குப் பிறகு, சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை சர்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குநர் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம்

'A 1' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தாரா அலிஸா பெர்ரி நடிக்கிறார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமும்கூட. படத்தின் முதல் பாதி ரொமான்டிக் காமெடியிலும் இரண்டாவது பாதியில் டார்க் காமெடியிலும் எடுக்க இருக்கின்றனர். வட சென்னை இளைஞராகச் சந்தானமும் அக்ரஹார பெண்ணாகத் தாராவும் நடிக்க உள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கோபி ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்', `மன்னவன் வந்தானடி', `ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயாராக இருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close