`டுலெட்' இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு! | tolet movie director next movie starting soon

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (02/03/2019)

`டுலெட்' இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

தேசிய விருது வாங்கிய திரைப்படம் `டுலெட்'. இயக்குநர் செழியன் எடுத்திருந்த இந்தப் படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ஷீலா நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒரு வாடகை வீட்டார் சந்திக்கிற பிரச்னையை இந்தப் படம் பேசியிருக்கும். பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்ட இந்தப் படம் பல விருதுகளையும் வாங்கி குவித்தது. 

டூலெட்

பின்னணி இசை என்கிற ஒன்றே இல்லாமலே இந்தப் படத்தை எடுத்திருந்தார் செழியன். படத்துக்கான ஒளிப்பதிவும் இவரே. இன்ட்டிபெண்டென்ட் படமான இந்தப் படத்தை இவரின் மனைவி பிரேமா செழியன் எடுத்திருந்தார். இந்த நிலையில், செழியன் தற்போது `அமீரா' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முக்கிய படைப்புகளான `கல்லூரி' `பரதேசி' படங்களுக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா அறிவுகொண்ட இவர், தனது முதல் படம் 'டுலெட்' மூலமாக உலகத்தில் இருக்கிற பலதரப்பட்ட உலகத் தரம்வாய்ந்த இயக்குநர்களின் பாராட்டையும் பெற்றார். தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரதிராஜா `தனது ஐம்பது வருட சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சினிமாவைப் பார்த்தது இல்லை' என்று பாராட்டித் தள்ளினார்.

டூலெட்

இந்தநிலையில், இவரின் அடுத்த படைப்பு எதைப் பற்றியதாக இருக்கும் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கிற பட்சத்தில் இதுக்கு விடை கிடைத்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஶ்ரீலங்க தேசத்துக்கு இடையே நடக்கும் கதையை எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஒருத்தரே தயாரிக்கவும் இருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close