``பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல!"- ஆர்.ஜே பாலாஜிக்கு மூடர்கூடம் நவீன் பதில்   | director naveen on RJ balaji's interpretation of rationalisation

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (02/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (02/03/2019)

``பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல!"- ஆர்.ஜே பாலாஜிக்கு மூடர்கூடம் நவீன் பதில்  

ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாகக் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எல்.கே.ஜி திரைப்படம், அரசியல் வட்டாரத்தில் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், சினிமா வட்டாரத்தில் பல சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இன்று படத்தின் ப்ரோமோ காட்சி ஒன்றை வெளியிட்டார் பாலாஜி, அதில், ``வீட்டுக்குள் கடவுளை கும்பிட்டாலும், வெளியே பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களைக் கும்பிடுவதுதான் பகுத்தறிவு" எனக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

நவீன்

இந்த ப்ரோமவை பார்த்த `மூடர்கூடம்' இயக்குநர் நவீன் ``தமிழர்கள் வீட்டில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசுபவர்கள் அல்லர். ஆத்திகர்களாக இருந்தும் சாத்திரங்களில் கூறப்படும் மூட நம்பிக்கைகளைக் களைந்து பகுத்தறிபவர்கள் எனவும், 95 சதவிகித பெரியார்வாதிகள் ஆத்திகர்களே" என்றும் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து நவீன் தனது பதிவில் #LKG வெற்றிக்கு வாழ்த்துகள் சகோ @RJ_Balaji. ஆனால், வீட்டுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு. ஆத்திகரே அதிகம் இருக்கும் இம்மண்ணில் சாஸ்திரம் கூறும் மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு. 95% of periyar’s supporters r not atheists" என்று பதிவிட்டுள்ளார்.   

பாலாஜி


[X] Close

[X] Close