சூர்யாவுடன் இணையும் ஆஸ்கர் வின்னர்! | oscar winner joins with surya

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (03/03/2019)

கடைசி தொடர்பு:06:59 (04/03/2019)

சூர்யாவுடன் இணையும் ஆஸ்கர் வின்னர்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'என்.ஜி.கே' திரைப்படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 38-வது படம்.

சூர்யா

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் அப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில், அந்தப் படத்தை சூர்யாவுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார் குனீத் மொங்கா. இதை ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, 2டி என்டர்டெயின்மென்ட்.  குனீத் மொங்கா தயாரித்த 'Period - End Of Sentence' எனும் ஆவணக் குறும்படத்துக்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது. இவர் தனது சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் பாலிவுட்டில் 'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் 1', 'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் 2', 'லன்ச் பாக்ஸ்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close