அசோக் செல்வன் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி! | vijay sethupathi released a motion poster of ashok selvan's film

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:32 (04/03/2019)

அசோக் செல்வன் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

அறிமுக இயக்குநர் விக்ரம் ஶ்ரீதரன் இயக்கத்தில் அசோக்செல்வன், சம்யுக்தா ஹர்னாட் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெட்ரம்'. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை சுந்தர் அண்ணாமலை என்பவர் தயாரித்துள்ளார். 'ரெட்ரம்' என்பதை ஆங்கிலத்தில் எழுதி அதை திருப்பிப் பார்த்தால் 'மர்டர்' என தெரியும்.

அசோக் செல்வன்

கொலையை மையமாக வைத்து எடுக்கவிருக்கும் இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தற்போது இதன் மோஷன் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அசோக்செல்வன் தற்போது, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரமாண்ட பொருள் செலவில் உருவாகும் 'அரபிகடலிண்டே சிம்ஹம்' படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் மலையாள திரைப்படம் இது. தவிர, `கச்சாங்', `ஜாக்', ஜனனி ஐயருடன் ஒரு படம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close