ஆனந்த விகடன் வாசகர்களுக்காக, வாரம்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் தடகள விளையாட்டுப் பயிற்சியாளர் நாகராஜ்.

``படிப்புதான் முக்கியம். விளையாட்ட ஓரங்கட்டி வை” - அனைத்து வீடுகளிலும் சொல்லப்படும் வழக்கமான அறிவுரை. சிறுவயதிலேயே விளையாட்டுமீது ஆர்வம்கொள்ளும் குழந்தைகளுக்கு, எத்தனை குடும்பங்களில் ஆதரவு கிடைத்துள்ளது? ``நீ கிரிக்கெட்டுல சச்சின்... செஸ்ஸுல விஸ்வநாதன் ஆனந்த்னா பெருமையா வெளில சொல்லிக்கலாம். ஆனா, கபடி கிபடின்னு சுத்திட்டிருக்கியே” போன்ற சினிமா வசனங்கள் நூற்றுக்கு நூறு நிஜத்திலும் உண்மை.

இங்கே விளையாட்டுத் திறமைகொண்ட குழந்தைகளை அடையாளம் காண்பதே அரிது. அதிலும் அடையாளம் கண்ட குழந்தைகளை `இந்த விளையாட்டுகளைத்தான் விளையாட வேண்டும். அதுதான் மரியாதை’ என்றெல்லாம் பேதத்தைத் திணிப்பது மோசமானது.

விளையாட்டுத்துறையைத் தேர்ந்தெடுப்ப தற்கு ஏன் இவ்வளவு கண்டிப்புகள், அதிருப்தி, எதிர்காலம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வு? ஒரு பதக்கத்தை வெல்ல, ஓராயிரம் தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் சாதனை வீரர் வீராங்கனைகள் எளிதில் உருவாக்கப்படுகிறார்களா? இல்லவே இல்லை.

திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்; சாதனையாளர்களை உருவாக்க முடியுமா என்றால்... முடியும்! ஆனால், அதற்காக எடுத்துக்கொள்ள ப்படும் காலமும் உழைப்பும் அதிகம். பள்ளிப்பருவத்திலேயே விளையாட்டுகளின் மீது ஆர்வத்தோடு இருக்கும் குழந்தை, தொடக்கத்திலேயே சாம்பியனா வதில்லை. எந்த விளையாட்டாக இருந்தாலும், இந்த விளையாட்டு செட் ஆகுமா, தொடர்ந்து இதில் பயிற்சி எடுத்துக்கொள்ளலாமா, உடல் ஒத்துழைக்குமா போன்ற பல தேர்வுகளை `டிக்’ செய்ய, குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவை.

உதாரணத்துக்கு, சமீபத்தில் நடைபெற்ற இளையோருக்கான ஆசியத் தடகளப் போட்டியில், இரண்டு தங்கப்பதக்கங்களை அள்ளி வந்தார் சென்னையைச் சேர்ந்த தபிதா. 16 வயதேயான இந்தத் தடகள வீராங்கனை, நீளம் தாண்டுதல், 100 மீட்டர் தடை ஓட்டம் போன்ற விளையாட்டுகளில் முதலிடம் பிடித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், தபிதா தன் விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கியது உயரம் தாண்டுதலில். தடகளத்தைப் பொறுத்தவரை, அடிப்படையான ஓட்டப்பயிற்சி முதலில் உடலைத் தகுதியாக்கும். பயிற்சி எடுத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள, ஒரு விளையாட்டு வீரரின் திறன் வெளிப்படும். எந்த டிராக் ஈவென்ட்டில் கலந்துகொள்ளலாம் என்பதை முடிவுசெய்ய, தொடர்பயிற்சி மிக அவசியம்.

ஆனால், சக்கரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அனைத்து விஷயங்களுமே இன்ஸ்டன்ட்டாக நடக்க வேண்டும். ``உனக்கு விளையாடும் திறமை இருந்தா, அத உடனே நிரூபிச்சுக் காட்டிடு. ஸ்கூல்ல நடக்கிற போட்டியில ஃபர்ஸ்ட் வா. அப்பதான் இனிமேலும் விளை யாட்ட தொடரலாமா வேண்டா மான்னு முடிவு பண்ணணும்” - விளையாட்டுகளில் இப்படி இன்ஸ்டன்ட் சாதனை யாளர்களை எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தம்!

பள்ளிப்பருவக் குழந்தைகளின் ஆர்வம், ஒன்றின் மீது ஒன்று என மாறிக்கொண்டே இருக்கும். எந்தத் துறையில் இயங்கலாம் என்பதைக் கண்டறிய அவகாசம் தேவைப்படும். விளையாட்டைப் போட்டுத் திணிப்பதால், மறைந்திருக்கும் உண்மையான வேறொரு திறனை எட்டிப்பார்க்கவிடாமல் அடியோடு புதைத்திடும்.

தடகளத்தில் சாதிக்க ஆர்வமும் பயிற்சியும், தளமும் இருந்தால் போதுமானது. மற்ற விளையாட்டுகளைப்போல இல்லாமல், தடகளத்துக்குத் தேவையான உபகரணங்கள் மிகக்குறைவே. அதனால்தான் `தடகளம், ஏழைகளின் விளையாட்டு’ எனப்படுகிறது. ஆர்வமிருக்கும் குழந்தைகள் அடிப்படை ஓட்டப் பயிற்சியிலிருந்து தொடங்க வேண்டும். அவரவருக்கான திறனைக் கண்டறியும் வரை பெற்றோரும் பொறுமைகாத்து ஆதரவு தந்தால், விளையாட்டுத்துறையில் பல சாதனையாளர்களை நாம் எதிர்பார்க்கலாம்.

-கார்த்திகா ராஜேந்திரன், படம்: க.பாலாஜி