Published:Updated:

`பேட்ட' படத்தின் 50-வது நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

`பேட்ட' படத்தின் 50-வது நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
`பேட்ட' படத்தின் 50-வது நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த `பேட்ட' திரைப்படம் வெற்றிகரமாக 50 -வது நாள்கள் ஓடியதை அடுத்து திருச்சி மாரீஸ் திரையரங்கம் முன்பு  திரண்டு வந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `பேட்ட' திரைப்படம் அவரின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.  தங்களின் தலைவரை மிகவும் இளமையாக காட்டப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
50-வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடும் நிலையில் `பேட்ட' திரைப்படத்தின் 50-வது நாள் விழாவை தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி ரஜினி மக்கள் மன்றத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் கலீல் மற்றும் துணைத் தலைவர் ராயல் ராஜி ஆகியோர் தலைமையில் திருச்சி துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திருச்சி மாரீஸ் திரையரங்கம் முன்பு திரண்டு வந்தார்கள்.

 
திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள் தங்களுக்குள் சந்தோஷமாக பரிமாறிக்கொண்டு `பேட்ட' திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடினார்கள்.