நிதின் சத்யா தயாரிப்பில் நடிக்கிறார் வைபவ்! | vaibhav will act in nithin sathya's production

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (04/03/2019)

கடைசி தொடர்பு:16:55 (04/03/2019)

நிதின் சத்யா தயாரிப்பில் நடிக்கிறார் வைபவ்!

'சென்னை 28', 'சரோஜா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பரிட்சயமானவர், நடிகர் நிதின் சத்யா. ஷ்வேத் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து 'ஜருகண்டி' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இதில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனியல் அன்னி போப் ஆகியோர் நடித்து வெளியான இப்படத்துக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அவர் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

வைபவ்

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் பிரபு சார்லஸ் என்பவர் இயக்குகிறார். இவர், இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரத்தை விரைவில் வெளியிட இருக்கிறது படக்குழு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close