உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி! - சினிமா தயாரிப்பாளர் முடிவு | tamil film prdoucer to donate rs 1 lakh to each of the CRPF martyrs of pulwama attack

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (04/03/2019)

கடைசி தொடர்பு:19:03 (04/03/2019)

உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி! - சினிமா தயாரிப்பாளர் முடிவு

இந்தியாவையே பெருந்துயரத்தில் ஆழ்த்திய புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் உதவி செய்துவருகின்றனர். முக்கியப் பிரமுகர்கள் பொருளுதவி செய்தவண்ணம் உள்ளனர். சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்துவருகின்றனர். 

ஜுலை காற்றில்

இன்று, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்குபெற்ற ' ஜூலை காற்றில்' படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா, சென்னையில் நடந்தது. அயல்நாடு வாழ் தமிழரான படத்தின் தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன், தனது படக்குழு சார்பில், புல்வாமா தாக்குதலில் தேசத்துக்காக இன்னுயிர் நீத்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.சிவசந்திரன் ஆகியோரின் தியாகத்தைப் பறை சாற்றும் வகையில், சிறு உதவியை வழங்கினார். அமரர் ஜி சுப்ரமணியனின் அக்கா சித்ரா, இந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டார்.  சிவசந்திரன் குடும்பத்தார், குறுகிய கால அவகாசத்தில் வர இயலவில்லையென்றும், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ஏனைய வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவியாக அளிக்க இருப்பதாகவும் படத்தின் இணைத் தயாரிப்பாளர் கருப்பையா கூறினார்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த  அமரர் ஜி சுப்ரமணியனின் அக்கா சித்ரா

இதையடுத்து, ராணுவ வீரர் சுப்ரமணியனின் அக்கா சித்ரா பேசியது, அந்த மேடையின் சூழலை மிகவும் கனமாக்கியது.


[X] Close

[X] Close