`வைரலாகத்தான் அப்படிச் செய்தோம்!’ - கார்த்தியைக் கலாய்த்தது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் | we done that for instant publicity clarifies kasturi

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (04/03/2019)

கடைசி தொடர்பு:21:01 (04/03/2019)

`வைரலாகத்தான் அப்படிச் செய்தோம்!’ - கார்த்தியைக் கலாய்த்தது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம்

ஜோஷ்வா ஶ்ரீதர் இசையில் தயாராகியுள்ள `ஜூலை காற்றில்' படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா இன்று நடைபெற்றது. நடிகர் கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். படத்தின் நாயகன் ஆனந்த் நாக், நாயகி அஞ்சு குரியன், நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் வரவில்லை எனப் புகார்கள்,  நகைச்சுவைகள், அரசியல் பஞ்சுகள், புல்வாமா வீரர்களுக்கு நிதியுதவி என எமோஷனல் கலவையாய்ச் சென்றிருந்த நிலையில் கஸ்தூரி கார்த்தியைப் பேச அழைக்கும்போது ``உங்க அப்பா பாக்குறதுக்குள்ள செல்ஃபி எடுத்துக்குறேன்’’ என்று சொல்லி செல்ஃபி எடுத்தார். சற்றும் பிடிகொடுக்காமல் கார்த்தி, ``செல்ஃபிக்கு,  ஒரு மரியாதையே இல்லாமல் போயிடுச்சு. முன்னாடி கேட்டுவிட்டு ஒரு போட்டோ எடுக்கலாம்னு இல்லாம. முகத்துக்கு முன்னாடி கேமராவை நீட்டுறாங்க. பின்னால ஒரு ஃபிளாஷ், முன்னால ஒரு ஃபிளாஷ்  கண்ணுல பட்டால என்ன மைக்ரைன் வியாதி இருக்குறவன் என்ன ஆவான். ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சு.

கார்த்தி

ஃபோட்டோ எடுப்பதைக்கூட மரியாதையாகக் கேட்டு எடுக்கத் தெரியாத அளவுக்கு ஆகிட்டோம்னு வருத்தமா இருக்கு. இப்படி எங்கையாவது சொன்னாத்தான் உண்டு. வேறு எங்கையும் சொல்ல முடியாது” என்றார். இதைத்தொடர்ந்து பேசிய கஸ்தூரி ``பொதுவெளியில் நாங்கள் செல்லும்போது எந்த மனநிலைமையில் இருக்கிறோம் என்று தெரியாமலே செல்ஃபி எடுக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து நடந்தா நல்லாயிருக்கும்’’ எனப் பேசி முடித்தார்.

 

 

 

சோஷியல் மீடியாக்களில் இந்தச் சம்பவம் குறித்து வீடியோக்கள் வைரலாக, ``இந்த மாதிரி வைரலாகத்தான் நாங்க அப்படிப் பண்ணோம். இது வேண்டுமென்றே செய்த விஷயம். நாங்க நினைச்சமாதிரியே இது வைரல் ஆயிடுச்சு. இத நம்பி கொந்தளிக்குறவங்க படத்தை என்ஜாய் பண்ணுவீங்க’’  என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். 

Kasturi


[X] Close

[X] Close