`நேர்கொண்ட பார்வை’ - ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! | first look of ajith next movie is released

வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (04/03/2019)

கடைசி தொடர்பு:17:53 (05/03/2019)

`நேர்கொண்ட பார்வை’ - ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

`தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு, ஹெச்.வினோத் சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துப்போக, ஓகே சொன்னார். ஆனால், அதற்கு முன் இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான `பிங்க்' படத்தை போனி கபூரின் தயாரிப்பில் ரீமேக் செய்யலாம் என முடிவுசெய்தனர். காரணம், `இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஶ்ரீதேவியுடன் கேமியோ ரோலில் அஜித் நடித்தபோது, தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்கும்படி ஶ்ரீதேவி அஜித்திடம் கேட்டிருந்தார். அப்போது அவரிடம் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவே இந்தப் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டார்.

அஜித்

வித்யா பாலன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் எனப் புது கூட்டணியுடன் களமிறங்குகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. `நேர்கொண்ட பார்வை' எனப் பெயர் வைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close