வரலட்சுமிக்கு `மக்கள் செல்வி’ பட்டம்..! -பிறந்தநாளில் வெளியான ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! | Danny first look poster released

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (05/03/2019)

கடைசி தொடர்பு:10:46 (05/03/2019)

வரலட்சுமிக்கு `மக்கள் செல்வி’ பட்டம்..! -பிறந்தநாளில் வெளியான ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பி.ஜி.முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி நடித்திருக்கும் படம் `டேனி’. விமன் சென்ரிக் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் ஜெயம் ரவியின் ட்விட்டர் பக்கத்திலும் சினிமா விகடனின்  ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்று வெளியாகி இருக்கிறது. 

டேனி

இது குறித்து இயக்குநர் சந்தானமூர்த்தியிடம் பேசும்போது, `இது எனக்கு முதல் படம். இதற்கு முன் இயக்குநர் சற்குணத்தின் ’சண்டிவீரன்’ படத்திலும் இயக்குநர் பி.ஜி.முத்தையாவின் ’மதுரவீரன்’ படத்திலும் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். ’டேனி’ படத்தில் வரலட்சுமி போலீஸாக நடிக்கிறார். இது எமோஷனல் த்ரில்லர் ஜானர் படம். நடிகை வரலட்சுமி சினிமாவில் நடிப்பதோடு பல மேடைகளில் அரசியல் குறித்து பேசி வருவதால் இந்தப் படத்தில் அவருக்கு `மக்கள் செல்வி’ என்கிற பட்டத்தை அறிவித்திருக்கிறோம். இந்தப் படத்தில் வரலட்சுமியுடன் வேல.ராமமூர்த்தி, யோகி பாபு, அனிதா சம்பத் மற்றும் ஒரு நாயும் நடிக்கிறது. இன்று வரலட்சுமியின் பிறந்தநாள் என்பதால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்தோம்’’ என்றார்.


[X] Close

[X] Close