ஆரம்பமானது விஜய் சேதுபதி - விஜய் சந்தர் படத்தின் படப்பிடிப்பு! | Vijay Sethupathi's next movie shooting started

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (05/03/2019)

கடைசி தொடர்பு:13:35 (05/03/2019)

ஆரம்பமானது விஜய் சேதுபதி - விஜய் சந்தர் படத்தின் படப்பிடிப்பு!

`வாலு', 'ஸ்கெட்ச்' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியவர், விஜய் சந்தர். தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பூஜை இன்று தொடங்கியது. 

விஜய் சேதுபதி - சூரி

`பாதள பைரவி' படத்தில் ஆரம்பித்து `பைரவா' படம் வரை 60-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன் முறையாக நடிக்கின்றனர். `ரம்மி', `சுந்தரபாண்டியன்' படத்துக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் சூரியும் விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து நாசர், அசுதோஷ் ரானா, ரவி கிஷான், 'நான் கடவுள்' ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான்விஜய், ஶ்ரீமன் ஆகியோர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் பணியாற்றுகிறார். கலை இயக்கம் பிரபாகர் என்பவரும், படத்தொகுப்பு பிரவீன் கே.எல், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு போன்றவர்களும் படத்தில் பணியாற்றுகின்றனர். `டோரா', 'குலேபகாவலி' படங்களுக்கு இசையமைத்த விவேக் - மெர்வின் இப்படத்துக்கு இசையமைக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜை இன்று தொடங்கியிருக்கிறது. 


[X] Close

[X] Close