`செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி!’ | Directer selvaraghavan's new movie update

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (05/03/2019)

கடைசி தொடர்பு:18:25 (05/03/2019)

`செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி!’

ஜெயம் ரவி, செல்வராகவன்

`துள்ளுவதோ இளமை’ படத்தில் திரைக்கதை, வசனம் எழுதியதிலிருந்து தன்னுடைய சினிமா பயணத்தைத் தொடங்கிய செல்வராகவன், `காதல் கொண்டேன்’, `7ஜி ரெயின்போ காலனி’, `புதுப்பேட்டை’, `ஆயிரத்தில் ஒருவன’, `மயக்கம் என்ன’, `இரண்டாம் உலகம்’ எனப் பல படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார். இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் `நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் சூர்யா நடிப்பில் தயாராகிவரும் `என்.ஜி.கே’ படங்களுக்காகப் பலர் காத்திருக்கும் நிலையில், தற்போது செல்வராகவனின் அடுத்த படத்தைப் பற்றிய ஒரு அப்டேட்.

`என்.ஜி.கே’ பட வேலைகளில் பிஸியாக இருக்கும் செல்வராகவன், இந்தப் பட ரிலீஸுக்குப் பிறகு, `ஜெயம்’ ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தற்போது தனது 24வது படத்தில் நடித்துவரும் `ஜெயம்’ ரவி, 25வது படமாக தன் அண்ணன் மோகன்ராஜாவின் இயக்கத்தில் `தனிஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களின் வேலைகளை முடித்துவிட்டு செல்வராகவனின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 


[X] Close

[X] Close