`42 பேருக்குத்தான் தெரியும்; மணமகன் பெயரை மாற்றிக் கூறினோம்!’ திருமண ஏற்பாடு குறித்து அனுஷ்கா #Virushka | Secret behind Virushka wedding

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:20:36 (05/03/2019)

`42 பேருக்குத்தான் தெரியும்; மணமகன் பெயரை மாற்றிக் கூறினோம்!’ திருமண ஏற்பாடு குறித்து அனுஷ்கா #Virushka

மணம் முடித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தனக்கும் விராட் கோலிக்கும் நடந்த திருமண நிகழ்வை எப்படி அவர்கள் ரகசியமாக வைத்திருந்தது குறித்து நடிகை அனுஷ்கா ஷர்மா மனம் திறந்திருக்கிறார். 

ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த அனுஷ்கா, ``எங்கள் திருமணம் பற்றிய செய்தி மொத்தமே 42 பேருக்குதான் முதலில் தெரியும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திருமண விழாவை நடத்திய ஈவென்ட் மேனஜரைத் தவிர வேறு யாருக்கும் நானும் விராட் கோலியும் மணம் முடிக்கப்போகிறோம் என்ற தகவல் தெரியாது.

அனுஷ்கா ஷர்மா

நாங்கள் அதை எங்கள் அளவில் மட்டுமே நடக்கும் ஒரு விழாவாகத்தான் வைத்துக்கொள்ள விரும்பினோம். ஒரு பெரும் செலிப்ரிட்டி திருமணமாக நடத்த எங்களுக்கு உடன்பாடி இல்லை. அதனால், திருமணத்துக்காக வேலை பார்த்த கேட்டரிங் முதல் அனைத்து சேவைகளிலும் ஈடுபட்ட ஊழியர்களிடம் மணமக்கள் பெயரை மாற்றிக் கூறினோம். பணியாற்றிய அனைவருக்கும் மணமகள் அனுஷ்கா, மணமகன் ராகுல் என்று கூறியிருந்தோம் என நினைக்கிறேன்’’ என்று அனுஷ்கா கூறியிருக்கிறார்.

கடந்த 2013 ம் ஆண்டு ஒரு ஷாம்பூ விளம்பரத்தில் இணைந்து நடித்தபோது நெருங்கிப் பழகத் தொடங்கிய இருவரும் நான்காண்டுகள் காதல் வாழ்க்கைக்குப் பிறகு 2017ம் ஆண்டு டிசம்பரில் இத்தாலியில் மணம் முடித்துக்கொண்டனர்.