`நீங்க பிழைச்சு வந்தா நானே கொல்றேன்' - மனைவியின் கோபத்துக்கு ஆளான அக்‌ஷய் குமார் | akshay kumar stunt on stage with fire

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (06/03/2019)

கடைசி தொடர்பு:08:30 (06/03/2019)

`நீங்க பிழைச்சு வந்தா நானே கொல்றேன்' - மனைவியின் கோபத்துக்கு ஆளான அக்‌ஷய் குமார்

பல்வேறு விதமான படங்களில் நடித்து பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர் அக்‌ஷய் குமார். `2.0' படத்தையடுத்து கேசரி, ஹவுஸ் புல் 4, குட் நியூஸ், மிஷன் மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அக்‌ஷய் குமார்

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் நடிக்கும் தொடர் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. டிஜிட்டல் தளத்தில் தனது பிரவேசத்தை 'தி எண்ட்' தொடர் மூலம் தொடங்குகிறார் அக்‌ஷய் குமார், இந்த நிகழ்வில் தன் உடல் முழுக்க நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு மேடையில் வலம் வந்தார். 

அக்‌ஷய் குமார்

இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த அக்‌ஷயின் மனைவி ட்விங்கிள் கண்ணா அதிர்ச்சி கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் `` இப்படி தீயில இருக்கறத நான் பாக்கணுமா. இதுல பிழைச்சு, வீட்டுக்கு வாங்க உங்களைக் கொன்னுடறேன்' என்ற பொருளில் ஆங்கிலத்தில் ட்வீட் பதிவிட்டிருந்தார்.  

அக்‌ஷய் குமார் மனைவியின் ட்வீட்

அக்‌ஷய் குறைந்த விநாடிகளுக்கே பாதுகாப்பு மற்றும் முன் ஏற்பாடுகளுடன் இதைச் செய்தாலும், பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

 

 

 


[X] Close

[X] Close