விஷால் படத்துக்கு `நோ' சொன்ன சன்னி லியோன்! | Sunny lennon says no for vishal movie 'ayogya'

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (06/03/2019)

கடைசி தொடர்பு:16:30 (06/03/2019)

விஷால் படத்துக்கு `நோ' சொன்ன சன்னி லியோன்!

அயோக்யா

தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படம் `டெம்பர்'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஷால் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. 

விஷால்

போலீஸ் கெட்டபில் விஷால் நடிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஹீரோயினாக ராஷி கண்ணா கமிட்யாகி இருக்கும் இதில், குத்துப் பாட்டு ஒன்றுக்கு விஷாலுடன் டான்ஸ் ஆட தெலுங்கு நடிகை ஷர்தா தாஸ் கமிட்யாகியிருக்கிறார். முதலில், இந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதற்கு பாலிவுட் நடிகை சன்னி லியோனியிடம் படக்குழு கேட்டுள்ளது. அவரின் கால்ஷீட் பிரச்னை மற்றும் சம்பளம் பிரச்னை காரணமாக ஷ்ர்தா கமிட் ஆகியுள்ளார். முன்னதாக, ஜெய் நடித்த `வடகறி' படத்துக்கு சன்னி லியோன் டான்ஸ் ஆடியது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸான நிலையில் திரைப்படம் ஏப்ரலில் ரிலீஸாக உள்ளது. படத்தில் நடிகர் பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close