`என் சினிமாப் பயணம் தொடங்கக் காரணம் இதுதான்!’ - மனம்திறக்கும் கிறிஸ்டோபர் நோலன் | directors should entice people to get them out of the house.- christopher nolan

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (06/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (06/03/2019)

`என் சினிமாப் பயணம் தொடங்கக் காரணம் இதுதான்!’ - மனம்திறக்கும் கிறிஸ்டோபர் நோலன்

கிறிஸ்டோபர் நோலன்

கிறிஸ்டோஃபர் நோலன், தனது அடுத்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கவுள்ளார். வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படம் இன்செப்ஷன் வடிவில் உருவாகும் ஒரு ரொமான்டிக் த்ரில்லராக இருக்கும். இப்படம் 2020 ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளதாகவும் தகவல். இந்நிலையில், சமீபத்தில் லண்டனில் நடந்த சினிமா சார் கருத்தரங்கம் ஒன்றில் பேசியவர், ``வீட்டுக்குள்ளே இருக்கும் ரசிகர்களை அங்கிருந்து வெளியே கொண்டுவருவது இயக்குநர்களின் கையில்தான் உள்ளது.

கிறிஸ்டோபர் நோலன்

வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சேவைகள் ரசிகர்களை வீடுகளுக்குள்ளேயே அடைத்துவைத்துவிடுகிறது. அவர்களை வீட்டைவிட்டு வெளியே வரவைப்பது நம்மைப்போல் இயக்குநர்களின் பொறுப்புதான். சிறு வயது முதலே தியேட்டரின் பிரமாண்டமான அமைப்பும், மிகப்பெரிய வெண் திரையும் என்னை ஈர்த்ததன் காரணம்தான் எனது சினிமாப் பயணம் தொடங்கக் காரணம். ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நல்ல கட்டமைப்புடன் திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் திரையரங்குகளை நிர்மானிக்க வேண்டும். எதிர்காலத்தில், வரும் எனது படங்களும் தியேட்டர் அனுபவத்தை நிர்பந்திக்கக்கூடிய படங்களாய் அமையும்" எனக் கூறியுள்ளார் நோலன்.  


[X] Close

[X] Close