வில்லன் அவதாரமெடுக்கும் சிம்பு! | simbu's first attempt to play a characters that have negative shades

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (06/03/2019)

கடைசி தொடர்பு:17:55 (06/03/2019)

வில்லன் அவதாரமெடுக்கும் சிம்பு!

'எனக்கா ரெட் கார்டு... எடுத்துப் பார்  ரெக்கார்டு' என்ற பாடல் வரிகளுக்கு சற்றும் குறையாமல், கெத்தாக சுற்றிவருகிறார் சிம்பு.

சிம்பு

'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்திற்கு மிதமான வரவேற்பே கிடைத்தாலும், சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது, ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' படத்தில், ஸ்பெஷல் கேரக்டர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு.

தனது உடல் வாகை பழையநிலைக்கே கொண்டுவர லண்டனில் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் இவர், 'மஹா' படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ள இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு, கன்னடத்தில் சிவராஜ்குமார், ஶ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற 'மஃப்டி' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யா

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார். விரைவில், இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்க உள்ளது. மற்றொரு கதாநாயகன் படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை.

 

 


[X] Close

[X] Close