கல்லூரி நண்பர்கள் உதவியால் உருவான `நெடுநல்வாடை' படத்தின் டிரெய்லர்! | Nedunalvaadai movie trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (06/03/2019)

கடைசி தொடர்பு:21:10 (06/03/2019)

கல்லூரி நண்பர்கள் உதவியால் உருவான `நெடுநல்வாடை' படத்தின் டிரெய்லர்!

அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நெடுநல்வாடை'. அறிமுக நடிகர்கள் இளங்கோ, அஞ்சலி நாயர் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். `பூ' ராமு, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் செல்வகண்ணன் தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்தபோது, அவரின் கல்லூரி நண்பர்கள் பலர் ஒன்றிணைந்து இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் தங்களின் நண்பருக்கு உதவியுள்ளனர்.

நெடுநல்வாடை

நண்பர்கள் கொடுத்த பணத்தை வைத்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் செல்வகண்ணன். ஜோஸ் ஃப்ராக்ளின் இசையில் உருவாகும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் டிரெய்லரை இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரிய பட்ஜெட் படங்களே கதை வலுவாக இல்லை என்றால் பாக்ஸ் ஆபீஸ் ஃப்ளாப்பாவது நடந்து வருகிறது. அந்தச் சமயத்தில் பல சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில், இந்தப் படமும் அந்த லிஸ்ட்டில் சேருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.   

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close