பிரீமியம் ஸ்டோரி

ன் டிவியின் `ஜெய் அனுமன்' சீரியலில், சுட்டிகளின் சூப்பர் ஹீரோ, குழந்தை வயது அனுமன். இதில் குழந்தை அனுமனின் குறும்பு, அன்பு, கருணை, வீரம் அனைத்துக்கும் தன் குரலால் வசீகரம் சேர்ப்பவர், கவீன் சஞ்சீவ். சென்னையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு சுட்டி.

நான்தான் தமிழ் அனுமன்

‘‘என் தாத்தா, அப்பா, அத்தை என்று குடும்பமே டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ். என் மாமா, டப்பிங் சீரியல் டைரக்டர்.  `ஜெய் அனுமன்' சீரியல் டப் செய்தப்போ, `குழந்தை அனுமனுக்கு நீ டப்பிங் பேசறியா?’ன்னு கேட்டார். எனக்கு அனுமனை ரொம்பப் பிடிக்கும். அவரோட உருவம், வீரம் எல்லாம் ஒரு சூப்பர்ஹீரோ மாதிரி இருக்கும். அதனால், உடனே ஓகே சொல்லிட்டேன். அப்போ நான் ஒன்றாம் வகுப்புதான் படிச்சுட்டிருந்தேன்'' என்று குஷியுடன் ஆரம்பிக்கிறார் கவின்.

‘‘நான் பேசவேண்டிய டயலாக்கின் அர்த்தத்தை, அத்தை சொல்லிக்கொடுப்பாங்க. அனுமன் அழற எமோஷனல் காட்சியில்தான் ஃபீலிங்கை குரலில் வெளிப்படுத்த கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு வாரமும் ரெண்டு நாள் காலையிலிருந்து மாலை வரை டப்பிங் பேசவேண்டியிருக்கும். ஆரம்பத்தில் அடிக்கடி டயர்டு ஆகிடுவேன். ஜூஸ், ஸ்நாக்ஸ், டாய்ஸ்னு கொடுத்து தூங்கவெச்சு ரிலாக்ஸ் பண்ணுவாங்க. என் அப்பா நல்லா தமிழ் பேசுவார். அவர்தான் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார். ஸ்கிரிப்ட் டயலாக்ல,  `இந்தத் தமிழ் வார்த்தைக்குப் பதில் இந்த வார்த்தையைச் சேர்த்துக்கலாமே'ன்னு சொல்ற அளவுக்கு இப்போ தேறிட்டேன். இந்த சீரியலில் இஷாந்த் என்ற பையன்தான் ஜெய் அனுமனா நடிச்சிருக்கார். அவரை நேரில் சந்திக்க ஆசை" என்கிறார்.

நான்தான் தமிழ் அனுமன்

‘‘என் குரலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. வெளியே போகும்போது என் குரலை வெச்சே அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டுவாங்க. பிரபல சினிமா வசனகர்த்தா ஆருர்தாஸ் சார், `உன் குரலுக்காகவே சீரியலை ரெகுலரா பார்க்கிறேன்'னு பாராட்டினார். இந்த டப்பிங் வாய்ப்பினால் எனக்கும் தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு. மேடை பயமில்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறேன். நான் ரஜினி அங்கிள், விஜய்சேதுபதி அங்கிள் ஃபேன். அனிமேஷன் படங்கள் அதிகம் பார்ப்பேன். படத்தில் பிடிச்ச டயலாக்கை, அடிக்கடி பேசிப் பார்ப்பேன். யூடியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிச்சு, சில வீடியோக்களையும் அப்லோடு பண்ணியிருக்கேன். இப்படி எவ்வளவுதான் பிஸியா இருந்தாலும் தினமும் ஃப்ரெண்ட்ஸ்கூட விளையாடுவேன். ஏன்னா, எல்லாத்தையும்விட ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப ரொம்ப முக்கியம்'' என்கிறார், இந்த ‘நண்பேன்டா' கவின்.

-கு.ஆனந்தராஜ்,  படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு