`எல்லாம் சரியா இருந்தா ஏப்ரலில் ரிலீஸ்!’ - `எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் குறித்து தயாரிப்பாளர் மதன் | 'enai noki paayum thota' movie release update

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/03/2019)

கடைசி தொடர்பு:18:51 (07/03/2019)

`எல்லாம் சரியா இருந்தா ஏப்ரலில் ரிலீஸ்!’ - `எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் குறித்து தயாரிப்பாளர் மதன்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முதல் படம், 'எனை நோக்கி பாயும் தோட்டா'. படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸான வரை இந்தப் படத்தின்மீது அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

எனை நோக்கிப் பாயும் தோட்டா


இந்தப் படத்துக்கு, காமெடி நடிகர் தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான 'விசிறி' பாட்டு பலரது மனதையும் கவர்ந்த நிலையில், படம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் இருந்துவருகிறது.  

மதன் ட்வீட்

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மதன், படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதன், ``எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெய்லர் ரெடியாகிவிட்டது. ரிலீஸுக்குத் தயாராகிவருகிறோம். எல்லாம் சரியாக இருந்தால் படம் ஏப்ரலில் ரிலீஸாகும்’’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் எனவும் கூறப்பட்டு வந்தது. படத்தில், நடிகை சுனைனா மற்றும் நடிகர் ராணாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close