சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்! | sivakarthikeyan will act in sun pictures production

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (08/03/2019)

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான `சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் `மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் மே 1-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அவர் தற்போது `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்சன் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன்

தவிர, `இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது அந்தப் படத்துக்கு இசையமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 16 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். `மெரினா’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையவிருக்கிறது இயக்குநர் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close