``பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாதீங்க!’’ - வெளியானது சூர்யாவின் விழிப்புணர்வு வீடியோ | Suriya's video about plastic prohibition

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (08/03/2019)

கடைசி தொடர்பு:19:46 (08/03/2019)

``பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாதீங்க!’’ - வெளியானது சூர்யாவின் விழிப்புணர்வு வீடியோ

சமூகச் செயற்பாடுகளில் எப்போதும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் நடிகர் சூர்யா, தற்போது பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்காக, 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த 4 நிமிட விழிப்புணர்வுப் படம், ஒரு பள்ளியின் வகுப்பறையில் நடைபெறுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது.

சூர்யா

மாணவர்களின் மதிய உணவு வேளையில் அவர்களிடம் பேசும் சூர்யா, பிளாஸ்டிக் பற்றிய கேள்விகளைக் கேட்கிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை எல்லாம் வகைப்படுத்தி அவை அனைத்தையும் ஏன் உபயோகிக்கக் கூடாது, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன, அது எப்படி நம்மையே மீண்டும் பாதிக்கிறது என்பதைப் பற்றி விளக்கமளிக்கிறார்.

மேலும், பிளாஸ்டிக் பைகள், குவளைகள், கொடிகள், தட்டுகள், உறிஞ்சுக் குழல்கள் போன்றவற்றுக்கு என்னவெல்லாம் மாற்றுப் பொருள்கள் என்றும் அவர் அந்தப் படத்தில் பட்டியலிடுகிறார்.

ஏற்கெனவே, கடந்த சில ஆண்டுகளாக, தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலமாக வறுமையிலிருக்கும் மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கு சூர்யா ஆதரவளித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, தமிழக அரசு முன்னெடுக்கும் டெங்கு குறித்த விழிப்புணர்வு, தேர்தல் ஆணையத்தின் வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கெடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 


[X] Close

[X] Close