`ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என யாரும் கூற முடியாது!’ - ட்ரோல் குறித்து ஆத்மிகா | aathmika replied her troller for meme

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (08/03/2019)

கடைசி தொடர்பு:21:42 (08/03/2019)

`ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என யாரும் கூற முடியாது!’ - ட்ரோல் குறித்து ஆத்மிகா

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல முடியாது - தன் `ட்ரோல்’ பற்றி  நடிகை ஆத்மிகா 

ஆத்மிகா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதேவேளையில் `மீசைய முறுக்கு’ படத்தில் நடித்த ஆத்மிகா தன்னை ட்ரோல் செய்தவருக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பெரிதும் நடைமுறையில் இருக்கும் மீம்கள், பார்வையாளர்களுக்கு நகைச்சுவையை ஏற்படுத்தினாலும் அதில் பகடி செய்யப்படும் நபருக்கு காயப்படுத்தும் ஒன்றாகவே இருக்கும். 

aathmikaa

சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப் படத்தையும் சேர்த்து கிண்டலாக `ஹாப்பி விமன்ஸ் டே’ என்ற பதிவிட்டு ஒரு மீம் தயார் செய்துள்ளனர். இந்த மீமை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு மீமை தயாரித்தவருக்கு ஒரு கடுமையான பதிவை ஆத்மிகா பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், இந்தப் பதிவை தோற்றத்துக்காகவும் அழகுக்காகவும், சமுதாயத்தில் கிடைக்கும் வெற்றிக்காகவும் ட்ரோல் செய்யப்படும் பெண்களின் சார்பாக இதைப் பதிவிடுகிறேன்’’ என ஆரம்பிக்கிறார். 

ட்ரொல்

``இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறு வயதிலிருந்து இப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறாய் என்று வருத்தப்படுகிறேன். நீ ஹ்ரித்திக் ரோஷன் போல் அழகனாகவே இருந்தாலும், நீ மனதளவில் நல்லவனாய் இல்லாததால் அசிங்கமானவன்தான். மற்றவர்களைக் காயப்படுத்தி வரும் சந்தோஷத்தில் வாழும் உன்னைப்போல் ஆட்கள் அழகு அகத்திலிருந்து வருவது என்று புரிய வேண்டும். இந்த மீமால் நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை, சோகத்தில் அழவும் இல்லை. ஒரு பெண் உயரம் - குட்டை, ஒல்லி - பருமன், பளிச்சிடும் அழகுடன்- கறுப்பாக என ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. கடவுள் எங்களைப் படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான். ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை. ஒவ்வொருவரின் தனித்துவத்தை மதிக்கிறோம். உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள். கண்டிப்பாக, பெண்ணாக இருக்க முடியாது. ஒரு பெண் இப்படி இன்னொரு பெண்ணைப் பற்றிப் பேச மாட்டார்’’ எனப் பதிவிட்டிருந்தார். ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.  

          


[X] Close

[X] Close