" சின்னத்திரையில் 6850 எப்பிசோடுகள் நடித்துள்ள ஒரே நடிகை!" - ராதிகா பெருமிதம் | Raadhika is proud to be part of 6850 episodes of serial in small screen

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (09/03/2019)

கடைசி தொடர்பு:19:50 (09/03/2019)

" சின்னத்திரையில் 6850 எப்பிசோடுகள் நடித்துள்ள ஒரே நடிகை!" - ராதிகா பெருமிதம்

சின்னத்திரை வரலாற்றில் அதிகமான சீரியல் எப்பிசோடுகளில் நடித்த பெருமை தன்னையே சேரும் என நடிகை ராதிகா இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராதிகா

தமிழில் மெகா சீரியல்களைப் பிரபலப்படுத்தியதில் முக்கியமான நபர் என்றால் நடிகை ராதிகா என்றே சொல்லலாம். தன்னுடைய ராடன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக, பல நெடும் தொடர்களை உருவாக்கியவர். 'சித்தி', 'அண்ணாமலை', 'செல்வி', 'வாணி ராணி' என அவர் காதாநாயகியாக நடித்த சீரியல்கள் மட்டுமல்லாது, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'சிவமயம்', 'ருத்ரவீணை' என காமெடி மற்றும் ஃபேண்டஸித் தொடர்கள் பலவற்றையும் தயாரித்துள்ளார்.

அந்த வரிசையில் அவர் இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட நெடும் தொடர்களில் மொத்தமாக 6,850 எப்பிசோடுகள் கதாநாயகியாக நடித்துள்ளார். 'காவேரி', 'அண்ணாமலை', 'செல்லமே', 'செல்வி', 'சித்தி', 'வாணி ராணி' என தற்போது சன் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் 'சந்திரகுமாரி', உள்பட மொத்தமாக 3,430 மணிநேரம் சின்னத்திரையில் நடித்துள்ளார் ராதிகா.

இதுகுறித்து ட்விட் செய்த அவர், "இதுவரை நான் 6,850 எப்பிசோடுகளில் நடித்துள்ளேன். தொலைக்காட்சியில் மட்டும் அது 3,430 மணிநேரங்கள். இப்படி நடித்துள்ள ஒரே நடிகை என்பதில் பெருமைகொள்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் அவசியமான ஒரு பிரேக் எடுக்கிறேன். அதன் பிறகு ஜூன் மாதத்தில் இருந்து ஒரு புதிய பரிமாணத்தில் என்னை மீண்டும் சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்குக் காண்பீர்கள். உங்கள் அனைவரின் பேரன்புக்கு நன்றி," என் எழுதியிருந்தார்.

மேலும் 'சந்திரகுமாரி' தொடர் மார்ச் 18ஆம் தேதியிலிருந்து தொடரும் என்றும் கூறியிருந்தார் ராதிகா.

 


[X] Close

[X] Close