ஆர்யா-சாய்ஷா திருமண கொண்டாட்டம் - திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு! | Arya Sayesha wedding to be held at Mumbai

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (10/03/2019)

கடைசி தொடர்பு:13:17 (10/03/2019)

ஆர்யா-சாய்ஷா திருமண கொண்டாட்டம் - திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!

பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் - சாயிரா பானு தம்பதியின் பேத்திதான் நடிகை சாயிஷா. இவர் வனமகன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்தார். அப்போது ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியுள்ளது. 

ஆர்யா

இதையடுத்து இருவருக்கும் காதலிப்பதாகவும், மார்ச் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகத் தகவல்கள் பரவிவந்தன. ஆனால், இதுகுறித்து நடிகர் ஆர்யா, மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருந்தனர்.

இதற்கிடையில் இந்த ஆண்டு காதலர் தினத்தன்று தங்களது திருமணம் தொடர்பான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார் நடிகை சாயிஷா. இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் வரும் மார்ச்சில் நாங்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளோம். இதை அறிவிக்க மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. எங்கள் புது வாழ்வைத் தொடங்க உங்களின் ஆசீர்வாதங்களும் தேவை," என எழுதியிருந்தார்.

இந்நிலையில், நேற்று இவர்களின் திருமண வரவேற்பு மற்றும் சங்கீத் நிகழ்ச்சி ஹைத்ராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்சோளி, சப்யஸாச்சி ஸ்தபதி பங்கேற்றனர்.  மேலும் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர் நடிகைகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இன்று மார்ச் 10-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆர்யா- சாயிஷாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.


[X] Close

[X] Close