"வெறித்தனமா தமிழ் கத்துக்கிட்டேன்" - எமோஷன் ஆன நடிகை ஷில்பா மஞ்சுநாத் | Shilpa Manjunath shares about learning Tamil for Ispade Rajavum Idhaya Raniyum

வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (10/03/2019)

கடைசி தொடர்பு:17:04 (10/03/2019)

"வெறித்தனமா தமிழ் கத்துக்கிட்டேன்" - எமோஷன் ஆன நடிகை ஷில்பா மஞ்சுநாத்

ரஞ்சித் ஜெயக்கொடி இயத்தில் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கும் படம் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்". ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் இணை நடித்திருக்கும் இந்த காதல் படத்துக்கு சாம். சி. எஸ் இசையமைத்துள்ளார்.

ஷில்பா மஞ்சுநாத்

கர்நாடகா மாநிலத்தின் மங்களூருவைச் சேர்ந்த நடிகை ஷில்பா இந்தப் படத்துகாக, தானே டப்பிங் செய்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் அது குறித்து பேசிய அவர், "கன்னடப் பொண்ணு தான் நான். ஆனா, வெறித்தனமா தமிழ் கத்துக்கிட்டேன். ஒரு நடிகரோட முதல் கடமையே முழுமையா நடிக்கிறது தான். திரையில தெரியிறது பாதி நடிப்பு தான். குரலில் காட்டும் உணர்ச்சிகள் தான் நடிப்பை முழுமையடையச் செய்யுது. அதுக்காகவே வெறித்தனமா தமிழ் கத்துக்கிட்டேன்," என்றார்.

மேலும், "ஏற்கெனவே என்னுடைய முந்தைய படமான 'காளி'யோட டப்பிங் சமயத்துல நான் பேசுறேன்னு இயக்குநர் கிருத்திகாகிட்ட கேட்டேன். ஆனா அது கிராமத்துக் கதாப்பாத்திரம் அதனால என்னால பேச முடியுமோ முடியாதோனு வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என வருத்தத்துடன் கூறினார்.

அதனால் தமிழ் கற்றுக்கொண்ட ஷில்பா, அதையும் தாண்டி, தமிழ் மொழி மீது அவர் வைத்திருக்கும் மரியாதை பற்றியும் ஷில்பா பேசினார். "உலகத்துல சில நாடுகள் இருக்கு. அங்க எல்லாம், குறிப்பிட்ட நான்கு ஐந்து மொழிகள் தெரிஞ்சா தான் பிழைக்க முடியும்.  அதுல இங்லிஷ் இல்ல, ஆனா தமிழ் இருக்கு. சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி இது. இவ்வளவு பெருமை உள்ள மொழிய கத்துகிறதுல என்ன தப்பு" எனக் கேட்டார்.


[X] Close

[X] Close