`கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்க, சொந்தத் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! | Sivakarthikeyan to act in his own production house

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/03/2019)

கடைசி தொடர்பு:10:12 (11/03/2019)

`கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்க, சொந்தத் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

அடுத்த சில மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிஸி என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ச்சியாக ஆறு படங்களில் நடிக்கவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

தற்போது, இயக்குநர் ராஜேஷின் 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் ரிலீஸை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் சிவா, 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடித்துவருகிறார். அதுபோக, 'இரும்புத்திரை' மித்ரனின் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாகப் பல படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் 'கல்யாண வயசு' பாடலை எழுதியிருந்தார் சிவா. அதுமட்டுமல்லாமல், நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்து பாதியில் நின்றுபோன வேட்டை மன்னன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் ட்ராப் ஆன பின்பும், சிவாவுக்கும் நெலசனுக்குமான நட்பு விஜய் தொலைக்காட்சியில் இருவரும் பணியாற்றிய நாள்களிலிருந்து தொடர்கிறது.

இப்போது, நெல்சனின் இயக்கத்தில் மீண்டும் அவர் நடிக்கிறார். வருகிற ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தைத் தன் சொந்த நிறுவனமான எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் மூலம் சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார். இந்தப் படம்குறித்து வேறு எந்தத் தகவல்களும் வெளியாகாத நிலையில், இயக்குநர், நடிகர் என இருவருக்குமே நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைப்பாளராக இருப்பார் என்று தெரிகிறது.

இதுவரை எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் பேனரில் இரண்டு படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் 'கனா', மற்றும் தற்போது படமாக்கப்படும், ஆர்.ஜே. ரியோ நாயகனாக நடிக்கும் 'ப்ளாக் ஷீப்' டீமின் படம்.  இரண்டாவது படத்தில் ரியோ ஹீரோ என்ற நிலையில், இப்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம்தான், தன் சொந்தத் தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் என்பது குறிப்படத்தக்கது.


[X] Close

[X] Close