`காஞ்சனா- 3' ரிலீஸ் தேதி அறிவிப்பு! | release date of kanchana 3 is announced

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (11/03/2019)

கடைசி தொடர்பு:17:35 (11/03/2019)

`காஞ்சனா- 3' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

`சிவலிங்கா' படத்துக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `காஞ்சனா 3'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. `முனி', `காஞ்சனா', `காஞ்சனா 2' ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காஞ்சனா 3

மதன் கார்க்கியின் டூபாடூ (DooPaaDoo) கம்பெனியின் மூலம் ஆறு இசையமைப்பாளர்கள் தனித்தனியே ஆறு பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளனர். தற்போது, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  தீவிரமாக நடைபெறும் இந்தப் படத்தை ஏப்ரல் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதே தேதியில் விஷால் நடிக்கும் `அயோக்யா' படமும் வரவிருக்கிறது. தவிர, `காஞ்சனா' படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார், ராகவா லாரன்ஸ். அதில் ஹீரோவாக அக்‌ஷய் குமாரும் ஹீரோயினாக கியாரா அத்வானியும் நடிக்க உள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close