`சூப்பர் டீலக்ஸ்' படவாய்ப்பை மறுத்துவிட்டேன்!'- அனுராக் ட்வீட் | Director Anurag kashyap Regret a chance to write Super Deluxe Movie

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (11/03/2019)

கடைசி தொடர்பு:18:55 (11/03/2019)

`சூப்பர் டீலக்ஸ்' படவாய்ப்பை மறுத்துவிட்டேன்!'- அனுராக் ட்வீட்

பாலிவுட்டின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தேவ்-டி, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், பாம்பே வெல்வெட் போன்ற பல படங்களை இயக்கியவர். படங்களை இயக்குவதோடு, பல நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இயக்குநர் என்பதைத் தாண்டி நல்ல திரைப்படங்கள் எந்த மொழியில் வெளியானாலும், அதைப் பாராட்டுவது இவரது வழக்கம். சுப்ரமணியபுரம், பருத்திவீரன், நான் கடவுள், வடசென்னை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களை அவர் பாராட்டியுள்ளார். சென்ற ஆண்டு வெளிவந்த 'இமைக்கா நொடிகள் ' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். தற்போது, அவர் மற்றொரு தமிழ்ப்படத்தைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனுராக்

அந்த ட்வீட்டில், ``சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்' எனப் பதிவிட்டிருந்தார். 'அதற்கு நடிகராகவா?' என ஒருவர் கமண்ட்டில் பதிவிட, 'நடிகராக அல்ல, அதில் ஒரு கதையை எழுதுபவராக' என பதில் தெரிவித்திருந்தார்.

அனுராக்

விஜய் சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின் நடித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் கதையை, தியாகராஜன் குமாரராஜா, நீலன் கே.சேகர், மிஷ்கின், நலன்குமாரசாமி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர்.  சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டிரெய்லரையும் அந்தப் பதிவில் ஷேர் செய்திருந்தார் அனுராக்.


[X] Close

[X] Close