வர்மா பட அப்டேட் - துருவ் விக்ரம் நண்பனாகக் களம் இறங்கும் பிளாக் ஷீப் அன்பு | smile settai anbu top play dhruv vikram's friend

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (11/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (11/03/2019)

வர்மா பட அப்டேட் - துருவ் விக்ரம் நண்பனாகக் களம் இறங்கும் பிளாக் ஷீப் அன்பு

துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடித்த `வர்மா' படம், இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே பல்வேறு பரஸ்பர காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தை `ஆதித்யா வர்மா' என்ற பெயரில் ரீபூட் செய்யத் திட்டமிட்டு, நேற்று முதல் ஷூட்டிங் தொடங்கியது. 

துருவ் விக்ரம்

இப்படத்தை `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார். பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்து துருவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். படத்தில் நடிகை கதாபாத்திரத்திலேயே ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதாபாத்திரத்தில் `மீசைய முறுக்கு', `கோலமாவு கோகிலா' படங்களில் நடித்த ஸ்மைல் சேட்டை அன்புதாசன் நடிக்கிறார். ஆன்லைனில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட இவர். அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   

அன்பு தாசன்

இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய முந்தைய வெர்ஷனுக்கு இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படம் ஜூன் மாதம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே கூறியிருந்தது.  


[X] Close

[X] Close