பெண் கபடி வீராங்கனைகளைக் கொண்டு படமாக்கப்படும் `கென்னடி கிளப்!' | kennedy club reaches final stages of shooting

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (12/03/2019)

கடைசி தொடர்பு:07:14 (12/03/2019)

பெண் கபடி வீராங்கனைகளைக் கொண்டு படமாக்கப்படும் `கென்னடி கிளப்!'

சசிகுமார், இயக்குநர் பாரதிராஜா, சூரி, காயத்ரி, `முனீஷ்காந்த்' ராம்தாஸ் என நடிகர் பட்டாளமே நடிக்க, பெண்கள் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சுசீந்திரன் இயக்கத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் இப்படத்தின் இசையை இமான் மேற்கொள்கிறார். 

கென்னடி கிளப்

தற்போது விழுப்புரத்தில் உள்ள கபடி விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்புக்காக ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர் என இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து 16 கபடி குழுக்களைச் சேர்ந்த 300 வீரர்கள் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். சசிகுமார் கபடி பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

சசிக்குமார்

இறுதிக்கட்ட காட்சி உண்மைத்தன்மை குறையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து  வருகின்றது படக்குழு.  இந்தப் போட்டிகளைக் காண அக்கம் பக்கம் ஊர்களிலிருந்து ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்தப் போட்டிகள் நிறைந்த காட்சிகள் அடுத்த 10 நாள்களுக்கு  நடக்கவிருப்பதாகவும் படக்குழு தெரிவிக்கிறது.


[X] Close

[X] Close