நான்கு மொழிகளில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் `டியர் காம்ரேட்' | Vijay Deverakonda's next movie Dear Comrade releases in four languages

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (12/03/2019)

நான்கு மொழிகளில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் `டியர் காம்ரேட்'

இப்போது அவர் நடித்துள்ள `டியர் காம்ரேட்' திரைப்படம் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. பரத் கம்மா எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமான `டியர் காம்ரேட்' தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது.

டோலிவுட்டின் சாக்லேட் பாயான இவர் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தமிழகம், கேரளா என பிற மாநிலங்களிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். பின்னர், அவருடைய அடுத்த தெலுங்குப் படமான 'கீத கோவிந்தம்' தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியாகி 75 நாள்கள் ஓடியது. அதைத் தொடர்ந்து, தமிழில், நேரடியாகக் கடந்த ஆண்டு அரசியல் த்ரில்லர் படமான `நோட்டா' வாயிலாக அறிமுகமானார்.

விஜய்

அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை என்றாலும், அவருக்குத் தமிழில் ஒரு நல்ல மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது. இந்நிலையில், இப்போது அவர் நடித்துள்ள 'டியர் காம்ரேட்' திரைப்படம் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. பரத் கம்மா எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே `கீத கோவிந்தம்' படத்தில் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தவர். இந்தப் படத்தின் டீசர் மார்ச் 17-ம் தேதி வெளியாகிறது.


[X] Close

[X] Close