`சன்னி லியோனுக்குப் பதில் சனா கான்!' - விஷாலின் அயோக்யா படத்தின் அப்டேட்ஸ் | sana khan danced for one song in ayogya film

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (12/03/2019)

கடைசி தொடர்பு:16:30 (12/03/2019)

`சன்னி லியோனுக்குப் பதில் சனா கான்!' - விஷாலின் அயோக்யா படத்தின் அப்டேட்ஸ்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான `சண்டக்கோழி 2' படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' படத்தில் நடித்து வருகிறார், விஷால். இது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'டெம்பர்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

விஷால் - சனா கான்

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். தவிர, கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஷாலுடன் சன்னி லியோன் நடனமாட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவருக்குப் பதில் ஸ்ரத்தா தாஸ் எனும் நடிகை நடனமாடுவதாக செய்திகள் வந்தன. இறுதியாக, சனா கான் அந்தப் பாடலில் நடனமாடி இருக்கிறாராம். இவர் `சிலம்பாட்டம்', `தம்பிக்கு இந்த ஊரு', `பயணம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். சில காலமாகவே கோலிவுட் பக்கம் வராமல் இருந்தவர் `அயோக்யா' படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இப்படத்தை ஏப்ரல் 19-ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close