``பெண்களைப் பழி சொல்லாதீர்கள்!"- பொள்ளாச்சி விவகாரத்தில் கொந்தளித்த பா.இரஞ்சித் | Pa Ranjith expresses his anger on Pollachi sexual violence matter

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (12/03/2019)

கடைசி தொடர்பு:17:30 (12/03/2019)

``பெண்களைப் பழி சொல்லாதீர்கள்!"- பொள்ளாச்சி விவகாரத்தில் கொந்தளித்த பா.இரஞ்சித்

பொள்ளாச்சியில் நடந்த கொடூரமான தொடர் பாலியல் வன்முறை குறித்து பல திரையுலகப் பிரபலங்கள் தங்களின் ஆதங்கத்தையும்  கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர். கரு.பழனியப்பன், ஜி.வி.பிரகாஷ், வரலட்சுமி சரத்குமார், சேரன், ஜெயம் ரவி எனப் பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவுசெய்துள்ளனர்.

பா.இரஞ்சித்

அந்த வரிசையில், இயக்குநர் பா.இரஞ்சித் தன் கருத்துகளை மிகவும் வலுவாக ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிக்க, பெண்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்பவர்களைக் கண்டித்து, இரஞ்சித், ``பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்னை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை," என்று எழுதியிருந்தார்.

தொடர்ந்து, அடுத்து ட்வீட்டில், ``ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூகச் செயல்பாடு, கலாசாரம் பற்றிய  பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும் " என்றும் பதிவிட்டிருந்தார் இரஞ்சித்.

மற்றொரு பதிவில், ``இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கிக்கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கப் போகிறோம்" என்று அவர் விரக்தியில் எழுதியிருந்தார்.
 


[X] Close

[X] Close