மாதவன் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா, ஷாரூக் கான்! | Actor madhavan to direct surya and sharkh khan

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (12/03/2019)

கடைசி தொடர்பு:18:01 (12/03/2019)

மாதவன் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா, ஷாரூக் கான்!

`விக்ரம் வேதா' படத்துக்குப் பிறகு தமிழ் மொழி சினிமாவுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார் நடிகர் மாதவன். இந்த நிலையில், தற்போது இவர் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். 

மாதவன்

முதலில் ஆனந்த மகாதேவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகியதன் காரணமாக தற்போது மாதவனே இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தப் படத்துக்காக மாதவன் வைத்திருந்த அவருடைய லுக் சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வைரலானது. குறிப்பாக இந்தப் படத்தில் நடிகை சிம்ரனும் நடித்துக்கொண்டிருக்கிறார். 

நடிகர் சூர்யா

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஷாரூக் கான் ஆகியோரும் மாதவனுக்காக இந்தப் படத்தில் கைகோக்க உள்ளனர். தமிழில் கேமியோ ரோலில் சூர்யாவும் இந்தியில் ஷாரூக் கானும் நடிக்க உள்ளனர். குறிப்பாக இந்தப் படத்தை ஜூலைக்குள்ளே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. `விக்ரம் வேதா' படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close