சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு! | sivakarthikeyan next movie titled as hero

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (13/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (13/03/2019)

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து, தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான 'கனா' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், 'மிஸ்டர்.லோக்கல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் மே 1-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தவிர, 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன்

இந்நிலையில், 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதில், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜுன்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்திற்கு, 'ஹீரோ' எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படத்தை முடித்த பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close