`தெலுங்கு சீரியலில் பிஸி, விரைவில் தமிழ் என்ட்ரி' - `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா! | nencham marapathillai saranya talks about her next project

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (13/03/2019)

கடைசி தொடர்பு:16:40 (13/03/2019)

`தெலுங்கு சீரியலில் பிஸி, விரைவில் தமிழ் என்ட்ரி' - `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில், நாயகியாக நடித்தவர் சரண்யா. நியூஸ் ஆங்கராக தன் கரியரைத் தொடங்கிய சரண்யாவுக்கு, 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் ஹை பீக் கொடுத்தது. இந்த சீரியல் தற்போது, முடிவடைந்துள்ள நிலையில், சரண்யாவை 'மிஸ் பண்ணுவதாக' பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக, சரண்யாவிடம் பேசினேன்.

சரண்யா

`` `நெஞ்சம் மறப்பதில்லை' தொடர்தான் மக்களின் மனதில் அவங்க வீட்டுப் பெண்ணுக்காக என்னை நினைக்க வெச்சுது. அந்தச் சீரியலில் நடிக்கும்போதே அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. வித்தியாசமான கேரக்டருக்காக காத்திருந்தேன். இப்போது தெலுங்கில் `ரோஜா' என்ற சீரியலில் நடிச்சுட்டு இருக்கேன். அதிலும், 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா போன்ற துருதுரு கேரக்டர். அதற்காக, தெலுங்கு கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். என்னுடைய வாய்ஸ்க்கு டப்பிங்தான் என்றாலும், நடிக்கும்போது உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லவா. சீரியல் ஒளிப்பரப்பான சில எபிசோடுகளிலே நல்ல பீட் பேக் வந்திருக்கு. சீரியலில் ஸ்கர்ட் அண்ட் டாப்ஸ்தான் என்னுடைய காஸ்டியூம் என்பதால், வித்தியாசமான லுக்கிற்காகத் தேடித்தேடி நிறைய ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கேன். கூடிய விரைவில் தமிழ் சீரியலிலும் என்னைப் பார்ப்பீங்க கண்மணிஸ்" என்கிறார் புன்னகையுடன்.


[X] Close

[X] Close