பெங்களூரில் தொடங்கியது `கே ஜி எஃப் 2' ஷூட்டிங்! | KGF movie second part shooting started

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (13/03/2019)

பெங்களூரில் தொடங்கியது `கே ஜி எஃப் 2' ஷூட்டிங்!

கே ஜி எஃப்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான 'கே ஜி எஃப்' படம் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை கன்னட ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் கொண்டாடினர். கோலார் தங்கவயலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை மிகப்பெரிய பொருள் செலவில் எடுத்துள்ளனர். ஶ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஹீரோ யாஷுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதைவிட அமேசான் ப்ரைமில் வெளியிட்ட பின் இதற்காக ரசிகர்கள் அதிகரித்தனர். தமிழில் கே.ஜி.ஆர் அசோக் எழுதிய வசனங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலரானது. கருடனைக் கொல்வதுடன் முதல் பாகம் முடியும். இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வருமென எதிர்பார்ப்பு அதிகமானது. அதை நிறைவேற்றும் வகையில் தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பை பெங்களூருவில் தொடங்கி உள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close