``கண்டிப்பா செய்வேன்  ஜி"- பிரதமருக்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் | rahman accepts prime minister modi's request on creating voting awareness campaign

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (13/03/2019)

கடைசி தொடர்பு:16:41 (13/03/2019)

``கண்டிப்பா செய்வேன்  ஜி"- பிரதமருக்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல்

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் தேர்வு,  பிரசாரம் எனத் தேர்தல்  வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்ல இந்திய  தேர்தல் ஆணையம் முனைப்பாக வேலை செய்து வருகிறது. 

மோடி

தனது பங்காக, பிரதமர் நரேந்திர மோடி சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அமீர் கான், அமிதாப் பச்சன், ஷாரூக் கான், தோனி, விராட் கோலி, சல்மான் கான், அலியா பட், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ரஹ்மான்

 இந்த ட்வீட்டுக்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ``கண்டிப்பா செய்வேன்  ஜி"  என்று ட்விட்டரில் உறுதியளித்துள்ளார்.


[X] Close

[X] Close