`என்னை யாரும் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி'னு குறிப்பிடாதீங்க'- கடிந்துகொள்ளும் மும்தாஜ்! | don't mention me as re - entry artist actress mumtaz request!

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (13/03/2019)

`என்னை யாரும் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி'னு குறிப்பிடாதீங்க'- கடிந்துகொள்ளும் மும்தாஜ்!

மும்தாஜ்


`அன்பு காட்டி ஏமாத்தறாங்க’ என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2ன் ஆரம்பத்தில் மும்தாஜின் மீது புகார் இருந்தது. ஆரம்பத்தில், ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் மும்தாஜ் குறித்து புறணிப் பேசிக்கொண்டே இருந்தார்கள். `எந்த டாஸ்க்கையும் ஒழுங்காப் பண்றதில்லை. பண்ண முடியலைன்னா வெளில போக வேண்டியதுதானே. மத்தவங்களுக்கு இடம் கிடைக்கும்ல்’ இப்படிப் பல கெட்டப் பெயரை சம்பாதித்தார். அதன் பிறகு பிரியத்துக்குரிய ‘மோமோ’வானார் மும்தாஜ்.

மும்தாஜ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வில்லியாக ஆரம்பத்தில் இருந்தவர் பிறகு பல ரசிகர்களை சம்பாதிக்க ஆரம்பித்தார். முதல் சீசனில் எப்படி ஓவியா ஆர்மி உருவானதோ, அதேபோல சீசன் 2ல் மும்தாஜ் ஆர்மி உருவானது. நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த சில நாள்களில், மும்தாஜின் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் அவரைச் சந்தித்து, கேக் வெட்டி செலிபிரேட்டும் செய்தனர். 

மும்தாஜ்

இப்படி, `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ராஜமாதாவாக வலம் வந்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை அடித்த மும்தாஜுக்கு ஜி தமிழ் `சூப்பர் மாம்' நிகழ்ச்சியின் நடுவராக வாய்ப்பு வந்தது. 'டான்ஸை மட்டுமே மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளுக்குத்தான் நடுவராக வருவேன்' என 'நோ நார்மல் ஷோ, ஒன்லி டான்ஸ் ஷோ வாய்ப்பை மறுத்துவிட்டாராம். `என்னை யாரும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் எனக் குறிப்பிட வேண்டாம்... நான் எப்போதும், `பிரேக் எடுத்துக்கொள்கிறேன்' எனச் சொல்லவே இல்லையே!' என்று செல்லமாக கடிந்துகொள்கிறார்.

இத்தனை நாள்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என எதிலும் தலைகாட்டாமல் இருந்தவர் தற்போது இன்ஸ்டாவில் இணைந்துள்ளார். `இனி இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணுங்க கண்ணுங்களா' என்கிறார் மோமோ. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close