உண்மைக் கதையைப் பின்னணியாக கொண்ட `ஹவுஸ் ஓனர்' - சூர்யா வெளியிட்ட டீசர்! | Houseowner movie teaser released by actor suriya!

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (13/03/2019)

கடைசி தொடர்பு:19:40 (13/03/2019)

உண்மைக் கதையைப் பின்னணியாக கொண்ட `ஹவுஸ் ஓனர்' - சூர்யா வெளியிட்ட டீசர்!

ஹவுஸ் ஓனர்

`ஆரோகணம்', `நெருங்கி வா முத்தமிடாதே', `அம்மணி' படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் `ஹவுஸ் ஓனர்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.  

`பசங்க' கிஷோர் நாயகனாகவும் நாயகியாக விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டார். 

2015, சென்னை வெள்ளத்தின்போது நடக்கும் ஒரு காதல் கதையே இந்தப் படத்தின் கதையாகும். ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே `ஹவுஸ் ஓனர்' என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை இருந்ததாம். ஆனால், அந்த நேரத்தில் `ஹவுஸ் ஓனர்' கதைக்கான முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லையாம். `ஹவுஸ் ஓனர்' படத்துக்கு கிஷோர் மற்றும் லவ்லின் சந்திரசேகர் பொருத்தமாக இருப்பார்கள் என்பதால் அவர்களையே பிக்ஸ் செய்துவிட்டாராம் இயக்குநர்.

'பசங்க' கிஷோர் - லவ்லின் சந்திரசேகர்

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு,  `இந்தப் படத்தில் `ஆடுகளம்' கிஷோரும் ஸ்கோர் செய்திருக்கிறார். `மகளிர் மட்டும்' பிரேம் எடிட்டிங் செய்கிறார், கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கான இசையமைப்பாளர் ஜிப்ரான்.

படம் வெளியிடுவதில் அவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது. அதையெல்லாம் சரிசெய்து, மே மாதம், முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். 

லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்தப் படம் முழுக்க முழுக்க இரண்டே இரண்டு பேரை வைத்து உருவாகிறப் படம். அந்த கேரக்டர்கள் ராதா, வாசு. அவர்களைச் சுற்றியே நடக்கும் கதை இது. நிறைய பேர் படத்தின் டைட்டிலைப் பார்த்துவிட்டு `டூ லெட்' மாதிரியான படமானு கேட்கிறார்கள். நிச்சயமா இல்லை. என்னுடைய எல்லாப் படங்களுமே உண்மைக் கதைகளைப் பின்னணியாக வைத்து இருக்கும். இதுவும் அப்படிப்பட்டதுதான்'' என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். 
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close