அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி... - ராஜமௌலியின் `ஆர்ஆர்ஆர்’ அப்டேட்ஸ் #RRRPressMeet | rajamouli about rrr in the recent pressmeet

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (14/03/2019)

கடைசி தொடர்பு:15:10 (14/03/2019)

அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி... - ராஜமௌலியின் `ஆர்ஆர்ஆர்’ அப்டேட்ஸ் #RRRPressMeet

ஆர் ஆர் ஆர்

பாகுபலியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வந்த நாள்முதல் அப்படம் எது சம்பந்தமாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைக் கொண்டு தயாராகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) படம் குறித்து இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினர்.  

ராஜமௌலி

அப்போது படம் குறித்து பேசிய ராஜமௌலி, ``இப்படம் 1920-களில் நடக்கும் கதை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராமா ராஜு, கொமரம் பீமா ஆகியோரை அடிப்படையாகக்கொண்ட புனைவு கதை.

RRR

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன், இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடியா பிரிட்டிஷ் நடிகை டெய்ஸி எட்ஜர் ஜோன்ஸ் நடிக்கிறார். படத்தின் முழுமையான தயாரிப்புக்கு 350 முதல் 400 கோடி வரை செலவு பிடிக்கும். படம் அடுத்த வருடம் ஜூலை 30-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி என பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளி வரும்" எனவும் தெரிவித்துள்ளார்.

Alia bhatt |  samuthrakani | daisy edgar jones | ajay devgn

அன்றைய மதராஸ் மாகாணத்தில், அல்லுரி சீதாராமா ராஜு, கொமரம் பீமா இருவரும் பிரிட்டிஷாரை எதிர்த்து கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். ராஜமௌலியுடன்  `பாகுபலி' படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமார், இசையமைப்பாளர் கீரவாணி, படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்திலும் இணைந்திருக்கின்றனர். 


[X] Close

[X] Close