மீண்டும் ஆரம்பிப்போம்... அந்த குட்டி இறுதி சர்ப்ரைஸ்... வெளியானது #AvengersEndGameன் டிரெய்லர் #WhateverItTakes | Avengers: End Game trailer is out!

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/03/2019)

கடைசி தொடர்பு:19:41 (14/03/2019)

மீண்டும் ஆரம்பிப்போம்... அந்த குட்டி இறுதி சர்ப்ரைஸ்... வெளியானது #AvengersEndGameன் டிரெய்லர் #WhateverItTakes

இந்த வருடத்தின் அதிக எதிர்பார்ப்புள்ள படமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்'மின் ட்ரெய்லர், சற்று நேரத்திற்கு முன்பு வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தில் வில்லன் தானோஸ் வெற்றிபெற, அண்டத்தின் பாதி மக்கள்தொகை மறைந்து போனது. இதில், பல சூப்பர் ஹீரோக்களும் அடங்குவர். இந்த நிலையில், வான்வெளியில் தனியாக சிக்கிக்கொண்டிருக்கும் அயர்ன்மேன் என்ன ஆனார்... கேப்டன் அமெரிக்காவின் தலைமையில் மீதம் இருக்கும் அவெஞ்சர்ஸ் என்ன செய்யப்போகிறார்கள் போன்ற பல கேள்விகளுக்கான விடை என்னவெனத் தெரிந்துகொள்ள, தற்போது உலகமெங்கும் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கின்றனர். 

 

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளிவந்தது. அதற்குப்பின், சிறிய ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியானது. 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' என்ற பெயரும் முந்தைய  ட்ரெய்லருடன் உறுதியானது. கடந்த வாரம் கேப்டன் மார்வெல் படம் வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. கேப்டன் மார்வெலின் பங்கு இருக்கும் என படத்தின்மூலம் தெரியவந்துள்ளதால், அவரின் காட்சிகளும்  ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. மேலும் 'அயர்ன்மேன்', 'கேப்டன் அமெரிக்கா' என மீதியிருக்கும் அவெஞ்சர்களின் கடந்த காலத்தை நினைவுபடுத்துவதாக இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. இத்துடன், ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது மார்வெல். இந்தப் படம், வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஆச்சர்யங்களை இன்னும் தக்கவைக்க, இந்தப் படத்தில் இருக்கப்போகும் நபர்கள் என்பது போல் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். கேப்டன் மார்வெல் முதல் முறையாக போஸ்டரில் இணைந்து இருக்கிறார். 

டிரெய்லரில் வரும் Whatever It Takes வசனமும், அதற்கான பின்னணி இசையும் நம்மை படம் பார்க்க இன்னும் அதிகமாய் தூண்டுகிறது. 

 

அவெஞ்சர்ஸ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close