என் சிந்தையெல்லாம் அதைப்பற்றி தான் - மனம் திறந்த ராஜமெளலி! | SS Rajamouli talks about his last film

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (14/03/2019)

கடைசி தொடர்பு:19:41 (14/03/2019)

என் சிந்தையெல்லாம் அதைப்பற்றி தான் - மனம் திறந்த ராஜமெளலி!

தனது கடைசிப் படம் எது என்பதுகுறித்த அறிவிப்பை இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர்

'பாகுபலி'யைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜமௌலி ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைக்கொண்டு ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாள்முதல், அப்படம் எது சம்பந்தமாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்த வண்ணம் இருந்தநிலையில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் சகிதமாக இயக்குநர் ராஜமௌலி, இன்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, படம்குறித்துப் பேசிய ராஜமௌலி, ``இப்படம் 1920-களில் நடக்கும் கதை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராமா ராஜு, கொமரம் பீமா ஆகியோரை அடிப்படையாகக்கொண்ட புனைவுக் கதை. 

ராஜமௌலி

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன், இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்க உள்ளனர்" என்று தெரிவித்தார். அப்போது அவரிடம், மகாபாரதம் எடுக்கப்போவதாகக் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``நான் முன்பே சொல்லிவிட்டேன், 'மகாபாரதம்' என் கனவுப் படம் என்று. இதை நான் பலமுறை தெளிவுபடுத்திவிட்டாலும், எனது அடுத்த படம் மகாபாரதம் தான் எனப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 

ராஜமௌலி

எங்கு போனாலும் அதைத்தான் கேட்கிறார்கள். 'மகாபாரதம்' படத்தை உடனடியாகத் தொடங்கிவிட முடியாது. அப்படித் தொடங்கினால், அதுதான் எனது கடைசிப் படமாக இருக்கலாம் அல்லது படங்களாக இருக்கலாம். மகாபாரதம் எடுக்கும் வரை அதைப் பற்றிய சிந்தனைகள் தான் 24 மணி நேரமும் எனது மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும். எப்போதும் அதைப் பற்றிய யோசனைதான் என் மூளையில் இருக்கும்" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close