``உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்கப்போறீங்க சாமி?" - கமல்ஹாசன் #Pollachi | Kamal speaks about pollachi issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:47 (15/03/2019)

கடைசி தொடர்பு:08:12 (15/03/2019)

``உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்கப்போறீங்க சாமி?" - கமல்ஹாசன் #Pollachi

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து தமிழ்நாட்டில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரே நாளில் இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

கமல் ஹாசன்

அதில், ``அந்தப் பொண்ணோட அழுகுரல் கேட்டதுல இருந்து மனசு பதறுது. நிர்பயாவுக்கு நடந்த கொடுமையைக் கேட்டு ஊர் உலகமே ஒண்ணா திரண்டப்போ, தமிழக முதல்வர் ஒரு அறிக்கை விட்டாங்க. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடூரக் குற்றங்களாகக் கருதப்பட்டு, உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் அரசாங்கம், எப்படி இவ்வளவு மெத்தனமாகவும், கவனக் குறைவாகவும் இருக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லேன்னு சொல்றதுல இருக்கிற மும்முரம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யும்னு சொல்றதுல இல்லையே. குற்றவாளிகள் எல்லா வீடியோக்களையும் அழிச்சிட்டதா சொன்ன பிறகு அந்த வீடியோ மட்டும் எப்படி வந்தது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை பாக்கெட்ல போட்டோவா வெச்சிருக்க நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்கிற இந்த அநியாயத்துக்கு  நீங்க என்ன பண்ணிருக்கீங்க. நான் கேட்குற கேள்வியெல்லாம் உங்களுக்கு மிஸ்டர். சீ.எம். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கேக்கல. இரண்டு பொண்ணுங்களோட அப்பாவா கேக்குறேன். என்ன பண்ணி, செஞ்ச தப்புகளுக்குப் பரிகாரம் பண்ணப் போறீங்க?

மகாபாரதமும் ராமாயணமும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்கான போர்களைப்பற்றியது. தன் பொண்டாட்டிக்காக போருக்குப் போற கடவுளார்கள் வாழற இந்த நாட்டுல உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்கப் போறீங்க சாமி" என்று கடுமையாகப் பேசியிருக்கிறார். இவரைப் போல் பல்வேறு பிரபலங்களும் பொள்ளாச்சியில் நடந்த வன்கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். 

முழு வீடியோவைப் பார்க்க...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


[X] Close

[X] Close