``இதில் நான் இல்லாமப் போயிட்டேனே..!” - `சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்து வருந்திய அனுராக் காஷ்யப் | Anuragh kashyap about Super deluxe

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (15/03/2019)

கடைசி தொடர்பு:14:43 (15/03/2019)

``இதில் நான் இல்லாமப் போயிட்டேனே..!” - `சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்து வருந்திய அனுராக் காஷ்யப்

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், `சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். 

அனுராக் காஷ்யப்

படம் வரும் 29-ம் தேதி வெளியாகும் நிலையில் முன்கூட்டியே படம் பார்த்த அனுராக் காஷ்யப், தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், ``படம் பார்த்த பிறகு இதில் நான் இல்லையே என வருத்தமாக இருக்கிறது. குமாரராஜா ஒரு வட்டத்தில் சிக்காத பயமற்ற இயக்குநர். இவரிடம் நிறைய திறமை உள்ளது. இந்தப் படத்தைப் பற்றி மேலும் சொல்லுவதற்கான சுதந்திரம் எனக்கு இல்லை. நீங்கள் எதிர்பார்க்காத ஒரு படமாக இது இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் சூப்பர் டீலக்ஸ் படத்தைப் பற்றிப் பதிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். 

முன்னதாக இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மறுத்துவிட்டேன் என அவர் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close