ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் ரீமேக்கில் அமீர்கான் - அடுத்த வருடம் வெளியிடத் திட்டம்! | Oscar winning film to be adapted by Aamir khan

வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (15/03/2019)

கடைசி தொடர்பு:17:57 (15/03/2019)

ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் ரீமேக்கில் அமீர்கான் - அடுத்த வருடம் வெளியிடத் திட்டம்!

அமீர் கான் நேற்று தன் 54-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

அமீர்கான்

1994-ம் ஆண்டு டாம் ஹேங்க்ஸ் நடித்து சர்வதேச அளவில் வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்ற படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் தழுவலை இந்தியில் எடுக்கவுள்ளார் அமீர். சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உரிமம் பாராமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதால் வயாகாம்18 நிறுவனத்துடன் இணைந்து அமீர் கான் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு 'லால் சிங் சத்தா' எனப் படத்துக்குப் பெயர் வைத்துள்ளார். 

டாம் ஹாங்க்ஸ்

சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். மேலும், இப்படம் அந்தப் படத்தின் ரீமேக்காக இல்லாமல் தழுவலாக மட்டுமே இருக்கும். அப்படத்தில் அமெரிக்க நிகழ்வுகள் கதையுடன் கோக்கப்பட்டிருக்கும் அதேபோல், இந்தி வெர்ஷனில் இந்திய வரலாற்று நிகழ்வுகள் கோக்கப்பட்டிருக்கும் அக்டோபர் மாதம் படப்பதிவு தொடங்கப் போவதாகவும், 2020-ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமீர்கான்


[X] Close

[X] Close