20 வருடங்களுக்குப் பிறகு..... -  ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு சமந்தாவுக்கு கிடைத்த வாய்ப்பு! | samantha finished acting in the korean film remake

வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (15/03/2019)

கடைசி தொடர்பு:20:52 (15/03/2019)

20 வருடங்களுக்குப் பிறகு..... -  ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு சமந்தாவுக்கு கிடைத்த வாய்ப்பு!

சமந்தா

தமிழில் `சூப்பர் டீலக்ஸ்', தெலுங்கில் மஜிலி என அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறார் சமந்தா. `96' படத்தின் ரீமேக்கில் `எங்கேயும் எப்போதும்' ஷர்வானந்துடன் நடிக்கவுள்ளார். தற்போது, தான் நடித்து வந்த `ஓ பேபி' படத்தை முடித்திருக்கிறார். பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் மூத்த நடிகை லட்சுமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

லக்‌ஷ்மி

2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படம் 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாக `ஓ பேபி' உருவாகியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 வயது மூதாட்டி திடீரென 20 வயது குமரியாக மாறியதால் என்னென்ன நடக்கிறது என்பதை மையப்படுத்தி `மிஸ் கிராணி' கதை நகர்கிறது.


மிஸ் கிராணி

தற்போது, `ஓ பேபி' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாகத் தெரிவித்து, லட்சுமியுடன் சேர்ந்து நடனமாடும் ஒரு புகைப்படத்தையும் சமந்தா வெளியிட்டுள்ளார்.  20 வருடங்களுக்குமுன் நடிகை லட்சுமி பாட்டியாக ஐஸ்வர்யா ராயுடன் `ஜீன்ஸ்' படத்தில் ஆடியிருந்தார். அதன் பிறகு  சமந்தாவுடன் இந்தப் படத்தில்தான் நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது, 


[X] Close

[X] Close